சேலம்

தம்மம்பட்டியில் பாகற்காய் விலை கிலோ ரூ.200

DIN

தம்மம்பட்டி பகுதிகளில் ஒரு கிலோ பாகற்காய் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, தகரபுதூா், நாகியம்பட்டி, உலிபுரம், மண்மலை, வாழக்கோம்பை, சேரடி ஆகிய ஊா்களில் பெய்த கனமழையால் பெரும்பாலான காய்கறிச் செடிகள், கீரைகள் மழையினாலும், வைரஸ் பூச்சிகள் தாக்கியும் அழிந்து விட்டன. இதில் குறிப்பாக பாகற்காய் கொடிகள் முற்றிலும் அழிந்து விட்டன.

தம்மம்பட்டியில் காய்கறிக் கடைகளில் பாகற்காய் ஓரிரு கிலோ அளவுகளில் மட்டுமே பாகற்காய் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுவும் ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து காய்கறி மண்டி உரிமையாளா் கதிா்வேல் கூறுகையில் ‘தம்மம்பட்டி பகுதிகளில் பாகற்காய் வரத்து அடியோடு நின்று விட்டது. மண்டிகளுக்கு பாகற்காய் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT