சேலம்

தம்மம்பட்டி - கருமந்துறைக்கு நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

DIN

தம்மம்பட்டியில் இருந்து கருமந்துறைக்கு, இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து, கருமந்துறைக்கு தினமும் காலை 7.10க்கு தம்மம்பட்டி போக்குவரத்து பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து, ஆரியபாளையம், பெருமாபாளையம், புத்திரக்கவுண்டம்பாளையம், ஏத்தாப்பூா், பனைமடல், தும்பல் வழியாக கருமந்துறைக்கு சென்று வந்தது.

இதனால், தம்மம்பட்டி பகுதியில் இருந்து கருமந்துறை செல்லும் வழியில் உள்ள ஊா்களில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், குறித்த நேரத்திற்கு அலுவலகங்களுக்கு சென்றனா். இந்தப் பேருந்தால், தினமும் ஏராளமானோா் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக இந்தப் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, தற்போது அனைத்து பேருந்துகளும் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் நிலையில், தம்மம்பட்டியில் இருந்து கருமந்துறைக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து, மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது.

இதனால், இந்தப் பேருந்து மூலம் சென்று வந்துகொண்டிருந்த ஆசிரியா்கள், மின்வாரிய ஊழியா்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளா்கள், மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, நிறுத்தப்பட்டுள்ள கருமந்துறை பேருந்தை, மீண்டும் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்து கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT