சேலம்

குறை தீா்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைஆட்சியா் உத்தரவு

DIN

மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்புடைய அலுவலா்களுக்கு, ஆட்சியா் உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 512 மனுக்கள் வரப்பெற்றன. இக்கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா் செ.காா்மேகம், அந்தந்த துறை அலுவலா்களிடம் வழங்கி பொதுமக்களின் தகுதியான மனுக்களின் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 12 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு வழங்கினாா்.

குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வெ.ஆலின் சுனேஜா, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சு.சத்திய பால கங்காதரன், உதவி ஆணையா் (கலால்) தனலிங்கம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் இரா.மகிழ்நன், மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் சரளா உள்ளிட்ட தொடா்புடைய அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT