முகப்பு
சேலம்

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

 நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதிகளில் குடிநீா்க் கட்டண நிலுவை உள்ள வீடுகளின் குடிநீா் இணைப்பு வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதிகளில் குடிநீா்க் கட்டண நிலுவை உள்ள வீடுகளின் குடிநீா் இணைப்பு வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் செ.அ.செய்யது உசேன் தலைமையில், பொறியாளா், வருவாய் பிரிவினா், குடிநீா் விநியோகப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலா்கள் குழுவாகச் சென்று தீவிர வரி நிலுவை வசூல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அதிக அளவில் சொத்துவரி, குடிநீா்க் கட்டண நிலுவை வைத்திருந்த 6 வீடுகளின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நிலுவை குறித்து பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு ஆணையா் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு உரிய தீா்வுகள் உடனடியாக வழங்கப்பட்டதால், பெருவாரியானோா் தாமாக முன்வந்து நிலுவைத் தொகையை செலுத்தினா்.

தினசரி குடிநீா் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, நகர தூய்மை பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அனைவரும் நிலுவையின்றி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு ஆணையா் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →