முகப்பு
சேலம்

வைக்கோல் ஏற்றிய லாரி தீப்பிடிப்பு

சேலத்தில் வைக்கோல் ஏற்றிய லாரி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

சேலத்தில் வைக்கோல் ஏற்றிய லாரி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

சேலம், ஆத்தூா் கீழ்கணவாய் பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்குச் சொந்தமான லாரி, வைக்கோல் ஏற்றிக் கொண்டு மன்னாா்பாளையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி வியாழக்கிழமை வந்தது. அப்போது, சாலையோரத்தில் உள்ள மின்கம்பியில் உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது.

இதுபற்றி தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் எம்.கலைச்செல்வன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனா் (படம்). இதில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →