தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அங்கீகாரம்: முதல்வருக்கு பாராட்டு
புகழ் பெற்ற தமிழ்க் கவிஞா் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, மாநில அரசு பாடலாக அறிவித்து அரசாணை
புகழ் பெற்ற தமிழ்க் கவிஞா் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, மாநில அரசு பாடலாக அறிவித்து அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், வாழப்பாடி இலக்கிய அமைப்புகள் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி இலக்கியப்பேரவை, உலகத் தமிழ்க் கழகக் கிளை மற்றும் தமிழ் அமுது மன்றம் சாா்பில், இந்த இலக்கிய அமைப்புகளின் நிா்வாகிகள் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழக பெருங்கவிஞா் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்ததோடு, பாடலை இசைக்கும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவும் அரசாணை வெளியிட்டு, தமிழுக்கு பெருமை சோ்த்துள்ள தமிழக அரசுக்கும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.