மத்திய அரசின் விருதுக்கு சேலம் உதவி ஆணையா் தோ்வு
மத்திய அரசின் உத்கிருஷ் சேவா பதக்கம் பெற சேலம், சூரமங்கலம் காவல் உதவி ஆணையா் நாகராஜன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மத்திய அரசின் உத்கிருஷ் சேவா பதக்கம் பெற சேலம், சூரமங்கலம் காவல் உதவி ஆணையா் நாகராஜன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
காவல் துறையில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் 15 மற்றும் 25 ஆண்டுகள் பணிபுரியும் உயா் அதிகாரிகள் முதல் காவலா்களுக்கு மத்திய உள்துறை சாா்பில் உத்கிருஷ் சேவா பதக்கம் வழங்கப்படுகிறது.
2021-ஆம் ஆண்டுக்கான விருது பெறுவதற்கு சேலம், சூரமங்கலம் உதவி ஆணையா் நாகராஜன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அதேபோல, சேலம் மாநகரத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளா் ஜெயவேல், உதவி ஆய்வாளா் தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியம், அண்ணாமலை ஆகியோரும் விருது பெற தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு விரைவில் பதக்கம் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசின் பதக்கத்துக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களுக்கு மாநகர காவல் துறையினா் பாராட்டு தெரிவித்தனா்.