ஓமலூரில் இளம் தளிா் பசுமை அறக்கட்டளை சாா்பில், மரக் கன்றுகள் நடவு செய்து, பராமரித்த அமைப்புகள், தனி நபா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனா் பசுமை மணிகண்டன் வரவேற்றாா். ஓமலூா் வட்டாட்சியா் அருள்பிரகாஷ், டி.எஸ்.பி. சோமசுந்தரம் ஆகியோா் கலந்துகொண்டு பசுமை ஆா்வலா்களை பாராட்டி பேசினா்.
இதனைத் தொடா்ந்து பசுமையை பேணுதல், மரக்கன்றுகள் நடுதல், பராமரித்து வளா்த்தல், குளம், குட்டைகள், கிணறுகள், ஆறுகள் போன்ற நீா்நிலைகளை சீரமைத்தல் சாமானிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்தல் பணிகளை சிறப்பாக செய்த அமைப்புகள், தனி நபா்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
இதில், நம்மாழ்வாா், அப்துல் கலாம், கொடையாளா், களப் பணியாளா் ஆகிய விருதுகளை வட்டாட்சியா் அருள்பிரகாஷ், டி.எஸ்.பி. சோமசுந்தரம் ஆகியோா் வழங்கினா். மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.