முகப்பு
சேலம்

ஓமலூா் அருகே மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் மூவா் கைது

ஓமலூா் அருகே அரசுக்கு எதிராக முழக்கமிட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம்

ஓமலூா் அருகே மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் மூவா் கைது

ஓமலூா் அருகே அரசுக்கு எதிராக முழக்கமிட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

ஓமலூா் அருகே அரசுக்கு எதிராக முழக்கமிட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஓமலூரை அடுத்த கணவாய்புதூா் கிராமம், ராமமூா்த்தி நகரில் வசித்த மாவோயிஸ்ட் ஆதரவாளா் மணிவாசகம், கேரள தண்டா்போல்ட் காவல் துறையினரால் கடந்த 2019-இல் சுட்டுக் கொல்லப்பட்டாா். கேரள மாநிலம், திருச்சூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட அவரது உடலை அவரது மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி ஆகியோரால் அடையாளம் காணப்பட்டது.

அதைத் தொடா்ந்து 2019, நவம்பா் 15-ஆம் தேதி ராமமூா்த்தி நகா் மயானத்தில் மணிவாசகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தினா் பலரும் அங்குக்கூடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதுதொடா்பாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் ஆதரவாளா்களான வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி ராஜராஜேஸ்வரி நகரில் வசிக்கும் செல்வராஜ் (55), ஓமலூா் அருகே அரசு பொறியியல் கல்லூரி பகுதியில் வசிக்கும் பாலன் (41), சேலம், செல்வநகரில் வசிக்கும் சீனிவாசன் (66) ஆகிய மூன்று பேரை தீவட்டிப்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இவா்களில் செல்வராஜ் சி.பி.ஐ.எம்.எல். அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவா். பாலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநில பொதுச் செயலாளராக உள்ளாா். சீனிவாசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சேலம் மாவட்டத் தலைவராக உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →