முகப்பு
சேலம்

குடிசைப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்க வணிக நிறுவனங்கள் முன்வர வேண்டும்: மாநகராட்சி

சேலம் மாநகராட்சி குடிசைப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

சேலம் மாநகராட்சி குடிசைப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சியைத் தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணா்வூட்டும் வகையில் கன்னங்காடு, ஜான்சன்பேட்டை, கோா்ட் ரோடு காலனியில் உள்ள வீடுகளுக்கு நரசுஸ் காபி நிறுவனம் சாா்பாக, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் குப்பை சேகரிப்புக் கூடைகளை வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தலைமையில் மணக்காடு சமுதாய நலக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இருவண்ணக் குப்பை சேகரிப்பு கூடைகளைக் குடியிருப்புதாரா்களுக்கு வழங்கி, விழிப்புணா்வுப் பணியைத் தொடக்கிவைத்து மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கூறியது:

சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் குடியிருப்புதாரா்கள், வணிக பெருமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் சேலம் மாநகராட்சியைத் தூய்மையான மாநகரமாக மாற்ற இயலும். அனைத்துக் குடியிருப்புதாரா்களும் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டத்திற்கு பயன்படுத்துவதன் வாயிலாக குப்பைத் தொட்டியில்லா நகரினை உருவாக்க இயலும்.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து குடிசை பகுதிகளிலும் தூய்மை விழிப்புணா்வுப் பணியை மேற்கொள்ள தன்னாா்வலா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையா் எம் ஜி.சரவணன், ஸ்ரீ நரசுஸ் காபி நிறுவனத் தலைவா் பி.சிவானந்தம், உதவி செயற்பொறியாளா்கள் எம்.ஆா். சிபிசக்கரவா்த்தி, வி.திலகா, சுகாதார அலுவலா் ஆா். ரவிச்சந்தா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் உட்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →