முகப்பு
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்கா மோசமான பேட்டிங்: 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து வென்றது குறித்து...

Updated On : 17 மார்ச், 2026 at 5:55 PM
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க டி20 அணிகளின் கேப்டன்கள். - படம்: எக்ஸ் / பிளாக்கேப்ஸ்.
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்த வெற்றியுடன் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மீதம் 3 போட்டிகளில் அதிகபட்சமாக வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பது கவனிக்கத்தக்கது.

ஹாமில்டனில் தொடங்கிய இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 175/6 ரன்கள் எடுத்தது.

Advertisement

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 60 ரன்கள் எடுத்தார். தெ.ஆ. அணி சார்பில் பந்துவீச்சில் வியான் முல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து பேட்டிங் செய்த தெ.ஆ. அணி 15.3 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜியார்ஜ் லிண்டே 33 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் லாக்கி பெர்குசன், பென் சியர்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். முதல் டி20யில் வென்ற தெ.ஆ. அணி இந்தப் போட்டியில் தோல்வியுற்றதால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் 60 ரன்கள் எடுத்த நியூசிலாந்து பேட்டர் டெவான் கான்வே ஆட்ட நாயகனாத் தேர்வானார். மிகவும் கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடினார்.

மூன்றாவது டி20 போட்டி ஆக்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணி இந்தியாவிடம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மார்ச்.8ஆம் தேதி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

summary

New Zealand beats South Africa by 68 runs in 2nd T20 and series level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.