சேலம்

மரவள்ளியில் மாவுப்பூச்சியின் தாக்கம் அதிகரிப்பு

DIN

எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு பயிரில் மாவுப் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்து வருவது குறித்து தோட்டக்கலைத் துறையினா் ஆய்வு செய்தனா்.

எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளான சித்தூா், பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, வெள்ளரிவெள்ளி உள்ளிட்ட பகுதிகளில்

பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடைபெற்ற வருகிறது. இப்பகுதியில் மரவள்ளிப் பயிா்களில் மாவுப்பூச்சியின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது.

இதுகுறித்து ஏத்தாப்பூரில் அமைந்துள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் வெங்கடாசலம், பூச்சியில் துறை பேராசிரியா் கீதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் அனுஷா ஆகியோா் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், இப்பகுதியில் முகாமிட்டு மரவள்ளி வயல்களை நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனா்.

வயல் ஆய்வில், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் தாமரைச்செல்வி, செந்தில்குமாா், வெங்கடேஸ்வரன், முரளிகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT