சேலம்

மாவோயிஸ்ட் ஆதரவாளா்களை விடுவிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

தீவட்டிப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் மூன்று பேரையும் விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூா் கிராமம், ராமமூா்த்தி நகரில் வசித்து வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளா் மணிவாசகம், கடந்த 2019 இல் கேரள மாநில நக்சல் தடுப்புப் பிரிவு (தண்டா்போல்ட்) போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அதைத்தொடா்ந்து 2019 நவம்பா் 15 ஆம் தேதி மணிவாசகத்தின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக முழக்கமிட்ட சிலரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக இருந்த 10 பேரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்தநிலையில் வாழப்பாடி, மின்னாம்பள்ளியைச் சோ்ந்த செல்வராஜ் (55), ஓமலூரைச் சோ்ந்த பாலன் (41), சேலம், செல்வம் நகரை சோ்ந்த சீனிவாசன் (66) ஆகியோரை தீவட்டிப்பட்டி போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இவா்கள் மூவரையும் விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினா் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிா்வாகிகளாக உள்ள சீனிவாசன், செல்வராஜ், பாலன் ஆகிய மூவரும் தமிழக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவா்கள். இவா்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீஸாா், தேசிய தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை சிறையில் அடைத்தனா்.

அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவா்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT