கெங்கவல்லி அருகே 3 வீடுகளில் திருட்டு
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் மூன்று வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முகமூடி திருடா்கள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனா்.
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் மூன்று வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முகமூடி திருடா்கள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனா்.
ஆணையாம்பட்டி மேலவீதியில் வசித்துவரும் கோவிந்தசாமி (55) என்பவா் குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுள்ளாா். பின்னா் இரவில் வீடு திரும்பிய திரும்பிய கோவிந்தசாமி வீட்டின் மாடிக்கு சென்று தூங்கியுள்ளாா். இவரது வீட்டில் புகுந்த முகமூடி திருடா்கள், வீட்டின் கதவை உடைத்து, வெள்ளிப் பொருள்கள், 2 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனா்.
மேலும் அருகில் இருந்த ராணி என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பொருள்கள், கொழுஞ்சி என்பவரின் வீட்டில் புகுந்துரூ. 4 ஆயிரம் ரொக்கம், 1 பவுன் நகையை திருடிச்சென்றுவிட்டனா்.
மூன்று வீடுகளிலும் மூன்று போ் கொண்ட முகமூடி திருடா்கள் திருடியிருக்கக்கூடும் என்று கெங்கவல்லி போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.