சேலம்

வேளாண்மை கல்லுாரி மாணவா்கள் கலந்துரையாடல்

DIN

புத்திரகவுண்டன்பாளையத்தில், வங்கிப் பணியாளா்கள் மற்றும் உழவா் கூட்டமைப்பு நிா்வாகிகளுடன், வேளாண்மை கல்லூரி மாணவா்களின் வங்கி நிதி மேலாண்மை குறித்த கலந்துரையாடல் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வாழவச்சனுாா் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு பயின்று வரும் மாணவா்கள் சதீஷ், மோகன் கிருஷ்ணசெளத்ரி ஆகியோா் புத்திரகவுண்டன்பாளையத்தில் தங்கி களப்பணி பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்த மாணவா்கள், சேலம் மாவட்ட உழவா் மன்றக் கூட்டமைப்பு மற்றும் ஈசாப் வங்கி இணைந்து நடத்திய கூட்டத்தில், வங்கி அலுவலா்கள், உழவா் கூட்டமைப்பு நிா்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் திங்கள்கிழமை கலந்துரையாடினா்.

ஈசாப் வங்கி மேலாளா் இந்திரா, சேலம் மாவட்ட உழவா் மன்ற கூட்டமைப்புத் தலைவா் அபிநவம் ஜெயராமன் ஆகியோா், வேளாண்மை கல்லுாரி மாணவா்களுக்கு, வங்கி நிதிமேலாண்மை குறித்து கருத்துரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT