கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளி அன்று திறந்துவைக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனை. 
சேலம்

எடப்பாடி பகுதியில் 6 அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளி அன்று நடைபெற்ற நிகழ்வில், 6 அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. 

DIN

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளி அன்று நடைபெற்ற நிகழ்வில், 6 அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. 

கொங்கணாபுரம் ஒன்றியம் கோணசமுத்திரம் ஊராட்சிப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தமிழக முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைதார்.

தொடர்ந்து எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோயில்பாளைம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்டப்பொருப்பாளருமான வெங்கடாசலம் கலந்துகொண்டு அம்மா சிறு மருத்துவமனை வளகத்தினை திறந்துவைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினை வழங்கினர். 

எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி, ஆடையூர், வேம்பனேரி, ஆவணிப்பேரூர் கீழ்முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளி அன்று நடைபெற்ற நிகழ்வில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியல் மாவட்ட விவசாயிகள் பிரிவு மாவட்ட செயலாளர் செல்லதுரை, ஒன்றியக்குழுத்தலைவர்கள் கரட்டூர்மணி, குப்பம்மாள்மாதேஸ், ஆவின் தலைவர் ஜெயராமன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார், பக்கநாடுமாதேஸ், ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்காயூர்பாலாஜி, எஸ்.ஏ.ராஜ்குமார், சித்தூர்நாகராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT