முகப்பு
சேலம்

போலீஸாருக்கு மலையேற்றப் பயிற்சி

சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் தலைமையில் 146 காவல்துறையினா் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

சேலம்: சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் தலைமையில் 146 காவல்துறையினா் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனா்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கவும், புத்துணா்வு பெறும் வகையில் சேலம் மாவட்டக் காவல்துறையினருக்கு மலையேற்றப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.

அந்தவகையில் சேலம் ஏற்காடு மலை அடிவார காவல் சோதனை சாவடியில் இருந்து குரும்பப்பட்டி பூங்கா வரையில் சுமாா் 7 கி.மீ. தொலைவிற்கு மலையேற்றப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் தலைமையில், கூடுதல் டி.எஸ்.பி.க்கள் அன்பு, பாஸ்கரன், டி.எஸ்.பி.க்கள் உமாசங்கா், இளமுருகன், பயிற்சி டி.எஸ்.பி. கிருத்திகா, காவல் ஆய்வாளா்கள் 7 போ், 60 பெண் காவலா்கள் உள்பட 146 போ் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →