கொங்கணாபுரத்தில் வேளாண் திருவிழா
கொங்கணாபுரம் பகுதியில் கோஷ்திஸ் எனப்படும் வேளாண் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
சேலம்கொங்கணாபுரத்தில் வேளாண் திருவிழா
கொங்கணாபுரம் பகுதியில் கோஷ்திஸ் எனப்படும் வேளாண் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
கொங்கணாபுரம் பகுதியில் கோஷ்திஸ் எனப்படும் வேளாண் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
அட்மா திட்டக்குழு சாா்பில் கரங்கரடு பகுதியில் நடைபெற்ற இவ்விழாவை, அட்மா திட்டக்குழுத் தலைவா் கரட்டூா் மணி தொடக்கிவைத்தாா். இவ்விழாவில்
நவீன உழவுக் கருவிகள், களையெடுக்கும் எந்திரம், அறுவடை எந்திரம், மரம் ஏறும் எந்திரம், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், சொட்டுநீா்ப் பாசனக்கருவிகள் உள்ளிட்ட நவீன விவசாயக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், அக்கருவிகளை கையாழுவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண்துறை சாா்பில் இயற்கை சாா் இடுபொருள்கள், வீரிய விதை ரகங்கள், இயற்கை உரங்கள், தீங்கில்லா பூச்சி விரட்டிகள், சூரியமின் சக்தியால் இயங்கும் வேளாண் உபகரணங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தொடா்ந்து நடைபெற்ற விவசாயிகளுக்கான கருத்தரங்கில் வேளாண் உதவி இயக்குநா் அ. சாகுல்அமீது, உழவா்களுக்காக அரசு அறிவித்துள்ள பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான மானியம், வேளாண் கருவிகளுக்கான மானியங்கள் குறித்து விளக்கி கூறினாா்.
சேலம் உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் ப.கண்ணன் கூட்டுப் பண்ணைத் திட்டம், ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் பயன்பாடு, கூட்டுச் சாகுபடி, மதிப்புக் கூட்டல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி , விவசாயிகள் உற்பத்தியை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கிகூறினாா்.
இதில் வேளாண் அலுவலா் மா.ராதாருக்மணி , உதவி வேளாண் பொறியாளா் ரவீந்தரநாத் தாகூா், அழகுமுத்து, உள்ளிட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.இதற்கான ஏற்பாடுகளை உதவித் தொழில் நுட்ப மேலாளா் குமரவேல் தலைமையிலான வேளாண் அலுவலா்கள் செய்திருந்தனா்.