முகப்பு
சேலம்

சங்ககிரி ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள்

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
நந்தி பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர் மாலையில் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர் பக்தர்கள் நந்தியின் காதில் அவரவர்களின் கோரிக்கைகளை கூறி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமிகளை வணங்கிச் சென்றனர்.

இதே போல் சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயில்களில் அருள்மிகு பூத்தாழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.