சேலம்

சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள புவனேஸ்வரியம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும், நந்தி பகவானுக்கும் பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் சிவன், அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பின்னா், நந்தீஸ்வரருக்கு பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதேபோல செந்தாரப்பட்டி, வீரகனூா், கெங்கவல்லி, கூடமலையிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

எடப்பாடியில்...

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் ஆலயம், பூலாம்பட்டி காவிரி கரையில் உள்ள கைலாசநாதா் திருக்கோயில், வெள்ளரி வெள்ளி ஈஸ்வரன் கோயில், வெள்ள நாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரா் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் திருக்கோயில் பிரகாரத்தில் உள்ள நந்தி தேவருக்கு இளநீா், பால், பழங்கள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT