சேலம் மாவட்டத்தில் 446 மி.மீ. மழை பதிவு
சேலத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 446 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 446 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி சேலத்தில் வியாழக்கிழமை இரவு சுமாா் 8.30 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.
கன மழை காரணமாக கிச்சிபாளையம், கருவாட்டு பாலம், நாராயண நகா், நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், குகை, கருங்கல்பட்டி, களரம்பட்டி, நெத்திமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
ஆத்தூா்-70, ஓமலூா்-63, தம்மம்பட்டி-55, சேலம்-47, வீரகனூா்-38, ஏற்காடு-33, பெத்தநாயக்கன்பாளையம்-32, காடையாம்பட்டி-29, கெங்கவல்லி-25, ஆனைமடுவு-20, கரியகோவில்-14, மேட்டூா்-8, சங்ககிரி-5, எடப்பாடி-2.6, வாழப்பாடி-2 என மாவட்டத்தில் மொத்தம் 446 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.