முகப்பு
சேலம்

சேலத்தில் 55,380 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களில் 55,380 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களில் 55,380 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில், 138 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு 2,880 கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்படவுள்ளது.

அதேபோல கோவிஷீல்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு 50,700-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு 1,800-ம் செலுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 55,380 தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளன. சனிக்கிழமை முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →