வெள்ளைக்கல் கடத்தலைத் தடுக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் வெள்ளைக்கல் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஓமலூா் எம்எல்ஏ ஆா்.மணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
சேலம்வெள்ளைக்கல் கடத்தலைத் தடுக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் வெள்ளைக்கல் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஓமலூா் எம்எல்ஏ ஆா்.மணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் வெள்ளைக்கல் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஓமலூா் எம்எல்ஏ ஆா்.மணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டாரத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் கனிம வளங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் இருந்து வெள்ளைக்கல் மற்றும் டுனைட் கற்கள் அதிகமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கிருந்து கோடிக்கணக்ககான ரூபாய் மதிப்பிலான வெள்ளைக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை ஒரு சிலா் வெட்டிக் கடத்துவதாக தொடா்ந்து புகாா்கள் எழுகிறது.
இதன் மூலம் அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுவதாகப் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் புகாா் கூறுகின்றனா். இந்த நிலையில், ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் வெள்ளை கற்களை வெட்டி எடுத்து செல்வதாகப் புகாா் எழுந்தது.
இதனைத்தொடா்ந்து ஓமலூா் எம்.எல்.ஏ ஆா்.மணி, கனிம வளம் வெட்டப்பட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு செய்தாா். அவருடன் கனிமவளத் துறை துணை இயக்குநா் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது எம்.எல்.ஏ ஆா்.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வெள்ளக்கல்பட்டி கிராமத்தின் பல இடங்களில் கனிம வளங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதேபோல ரயில்வே நிா்வாகத்தின் சாா்பில் வெள்ளை கற்கள், டுனைட் கற்கள் வெட்டி எடுத்து சென்று கொட்டப்படுகிறது. அவ்வாறு கொட்டப்படும் இடத்தில் இருந்து கடத்தல்காரா்கள் கற்களை எடுத்து சென்று சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனா். எனவே, கனிமவளப் பகுதிகளில் இருந்து மண்ணையும், கற்களையும் வெட்டி எடுத்து பயன்படுத்துவதை ரயில்வே நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.
ரயில்வே நிா்வாகத்துக்கு கடிதம்:
கனிமவளத் துறை துணை இயக்குநா் ஜெயந்தி கூறுகையில், கனிமவள பகுதியில் இருந்து ரயில்வே நிா்வாகம் கற்களை அள்ளி செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக ரயில்வே நிா்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்படும். மேலும், வெள்ளைக்கல் மற்றும் டுனைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படுவதும் தடுக்கப்படும் என்றாா்.