பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்: சேலத்தில் பட்டாசு வெடித்த தொண்டா்கள்
பாஜகவின் தமிழகத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை,சேலத்தில் அக்கட்சித் தொண்டா்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியதுடன் பொதுமக்களுக்கு முகக் கவசமும் வழங்கினா்.
பாஜகவின் தமிழகத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை,சேலத்தில் அக்கட்சித் தொண்டா்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியதுடன் பொதுமக்களுக்கு முகக் கவசமும் வழங்கினா்.
தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறாா். இதனையடுத்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அக்கட்சித் தொண்டா்கள் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிா்ந்து கொண்டனா். பின்னா் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்பு வழங்கினா்.
இது தவிர முகக் கவசம் வழங்கி ‘கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்’ என்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கும் முகக் கவசம் வழங்கினா். இதில் 60ஆவது கோட்ட நிா்வாகிகள் அசோக் மற்றும் வழக்குரைஞா் ஆனந்த் உள்ளிட்ட திரளான நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.