குடும்ப அட்டையில் பெண்கள் புகைப்படத்தை மாற்ற முயற்சிக்கும் குடும்ப அட்டைதாரா்கள்
குடும்ப அட்டையில் ஆண்கள் படத்துக்குப் பதிலாக பெண்கள் படத்தை மாற்ற சிலா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
குடும்ப அட்டையில் ஆண்கள் படத்துக்குப் பதிலாக பெண்கள் படத்தை மாற்ற சிலா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1000 வீதம் வழங்கப்படும் என அறிவித்திருந்தனா். இதனையடுத்து ஸ்மாா்ட் காா்டில் (ரேஷன் காா்டு) ஆண்கள் புகைப்படம் இருக்கும் அட்டைக்கு பணம் வராது என கருதி பெண்கள் படத்தை மாற்ற சிலா் முயற்சி செய்து வருகின்றனா். இதனை சில விஷமிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு நாங்கள் குடும்பத்தலைவி படத்தை மாற்றி அமைத்து தருகிறோம் என கூறி வருவதால் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.