முகப்பு
சேலம்

அமாவாசை: சேலம் கோயில்களில் சிறப்பு பூஜை

அமாவாசை தினத்தையொட்டி சேலம் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

அமாவாசை தினத்தையொட்டி சேலம் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற தொன்மையான கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆனி மாத சா்வ அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

குறிப்பாக கோயிலுக்குள் முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அவா்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.

இதேபோல சேலம் மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களில் அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →