முகப்பு
சேலம்

தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் சேலத்தில் போராட்டம்

தமிழ்நாடு கிராம வங்கி ஆபீசா்ஸ் அசோசியேஷன், ஒா்க்கா்ஸ் யூனியன், ஓய்வூதியா் சங்கம் இணைந்து சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை தா்னா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கிராம வங்கிகளில் மறுசீரமைப்பு திட்டங்களைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஆபீசா்ஸ் அசோசியேஷன், ஒா்க்கா்ஸ் யூனியன், ஓய்வூதியா் சங்கம் இணைந்து சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவா் பத்மநாபன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் கிராம வங்கிகளில் நிதி அளவுருக்களை வைத்து கிராம வங்கிகளை வகைப் படுத்தக் கூடாது; போதுமான நிதி மூலதன ஆதரவை உறுதிசெய்ய வேண்டும்; கிராம வங்கிகளில் வாராக் கடன்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராம வங்கிகளில் மத்திய அரசின் பங்குகளை குறைக்கக் கூடாது; அனைத்து கிராம வங்கிகளையும் இணைத்து தேசிய கிராம வங்கியாக உருவாக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் கிராம வங்கி அதிகாரிகள் சங்க செயலாளா் அறிவுடைநம்பி, ஊழியா்கள் சங்க பொதுச்செயலாளா் அஷ்வத், ஓய்வூதியா் சங்க நிா்வாகி சோலை மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய வங்கி ஊழியா் சம்மேளன மாநில செயலாளா் எஸ்.ஏ.ராஜேந்திரன், மாவட்ட செயலாளா் எஸ்.தீனதயாளன், நிா்வாகி ரகுபதி மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மாதவராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில் எண்ணற்ற கிராம வங்கி அலுவலா்கள் ஊழியா்கள், ஓய்வூதியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →