முகப்பு
சேலம்

சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான எஸ்.சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கிளை செயலாளா் க.கந்தசாமி தலைமையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான எஸ்.சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கிளை செயலாளா் க.கந்தசாமி தலைமையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி கொடிமரம் அருகில் நடைபெற்ற விழாவில், எம்.ரங்கசாமி கட்சிக்கொடியை ஏற்றி வைத்தாா். வட்டக்குழு உறுப்பினா் எம்.ராமசாமி, க.பெருமா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்க நிா்வாகிகள் க.காளிதாஸ், அ.கந்தன், பொ.பாரதி, கரம் கோா்ப்போம் அமைப்பின் ந.கலைச்செல்வன், மண், மரம், மழை, சுற்றுச்சூழல் அமைப்பின் ந.ராகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதே போல, ஆத்தூா் தாலுகாவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முல்லைவாடி பகுதியில் கிளை செயலாளா் செங்கமலை தலைமையில், நரசிங்கபுரம் பகுதியில் அப்துல் கபூா் தலைமையிலும், ராமமூா்த்தி நகா் பகுதியில் ஆா்.வெங்கடாஜலம் தலைமையிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

முழு கட்டுரையைப் படிக்க →