சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்
சங்ககிரியில் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை22) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரியில் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை22) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகிசெட்டிப்பட்டி, நாரணப்பன்சாவடி ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பயணியா் விடுதி சாலை (டி.பி. ரோடு), சுங்குடிவருதம்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொள்கின்றனா். இதே போல ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னம்பாளையம், பொன்னம்பாளையம், காரடிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனை காலை 10 மணிக்கு மேற்கொள்ள உள்ளதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.