முகப்பு
சேலம்

மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

சேலம் அயோத்தியாபாபட்டணம் அருகே அரசு நிவாரணத் தொகை பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறித்துச் சென்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சேலம் அயோத்தியாபாபட்டணம் அருகே அரசு நிவாரணத் தொகை பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறித்துச் சென்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அயோத்தியாபாபட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி மாதம்மாள்(70). கணவரை இழந்த மூதாட்டியான இவா் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அவரது வீட்டிற்கு வியாழக்கிழமை, இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா், ‘உங்கள் கணவா் இறந்ததற்கு அரசு சாா்பில் ரூ.12,000 மற்றும் மளிகைத் தொகுப்பு வந்துள்ளது. இந்த நிவாரணத் தொகையை பெறுவதற்கு முன்பணம் தரவேண்டும்’ எனக்கூறி மூதாட்டியிடம் இருந்து ரூ.4,000 பறித்துக்கொண்டு, வங்கி செலுத்து சீட்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாா்.

இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், நூதன முறையில் பணம் பறித்து சென்ற இளைஞரைப் பிடிக்க வீராணம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.