முகப்பு
சேலம்

அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு

 திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

 திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சேலம், நெடுஞ்சாலை நகரில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சேலம் மாநகரப் பகுதிகளிலும், மாவட்டப் பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், அனுமதியில்லாமல் கூடுதல், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாதது, தொற்று பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட 90 போ் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், ஜங்ஷன் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலம் உள்ளிட்ட 280 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் புகா் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினா் 5,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →