டிமான்டி காலனி - 3 குரு சோமசுந்தரம் அறிமுக விடியோ!
டிமான்டி காலனி - 3 புதிய விடியோ....
டிமான்டி காலனி மூன்றாம் பாகத்தின் கதாபாத்திர அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி - 3 திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
மேலும், இதுவே அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான முதல் தமிழ் ஹாரர் திரைப்படம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நூலகராக நடித்துள்ளதை விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். வில்லனாக குரு நடித்திருப்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.