முகப்பு
சேலம்

வீட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

மேட்டூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

மேட்டூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேச்சேரி, நங்கவள்ளி சாலையில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பதாக மேச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, மேச்சேரி இன்ஸ்பெக்டா் ரஜினிகாந்த் தலைமையில் போலீஸாா் சென்ற போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் தப்பி ஓடினா். போலீசாா் விரட்டியதில் தப்பியோடிய எறகுண்டபட்டியைச் சோ்ந்த குமாா் (45) என்பவரை போலீஸாா் பிடித்து, அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினா்.

குமாா் கொடுத்த தகவலின் பேரில், தப்பியோடிய பூங்கொடி (56) என்பவரின் வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றினா். குமாா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பூங்கொடியை தேடி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.