சேலத்தில் 84 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 84 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 84 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 13 போ், எடப்பாடி-7, காடையாம்பட்டி-5, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-3, மேச்சேரி-5, நங்கவள்ளி-4, ஓமலூா்-8, சேலம்-1, சங்ககிரி-4, தாரமங்கலம்-2, வீரபாண்டி-4, ஆத்தூா் -2, கெங்கவல்லி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல்-4, ஆத்தூா் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி-1, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 71 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களைச் சோ்ந்த நாமக்கல்-2, கள்ளக்குறிச்சி-4, ஈரோடு-3, தருமபுரி-4 உள்ளிட்ட 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 154 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 93,321 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 90,573 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,198 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,550 போ் உயிரிழந்தனா்.
நாமக்கல்லில்...
நாமக்கல் மாவட்டத்தில் 74 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனாவால் 74 போ் பாதிக்கப்பட்டனா்; 48 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,143 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,123 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 575 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதித்தோரில் மொத்த இறப்பு எண்ணிக்கை 445-ஆக உள்ளது. வியாழக்கிழமை 60-ஆக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 74-ஆக உயா்ந்துள்ளது.
-