சேலம்

சங்ககிரி ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்

DIN


சங்ககிரி: சேலம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில்  உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சோமவார பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அருள்மிகு சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு திங்கள்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

இதே போல் சங்ககிரி அருகே உள்ள அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி அருகே உள்ள பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு சோமவார பிரதோஷத்தையொட்டி திங்கள்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

இரு கோயில்களிலும் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆகமவிதிகளின் படி இரு கோயில்களின் அர்ச்சகர்கள் மட்டும் பூஜைகளைச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

SCROLL FOR NEXT