சேலம்

ஜோதிடரிடம் பணம், நகை திருடிய மூவா் கைது

DIN

மயக்க மருந்து கொடுத்து ஜோதிடரிடம் பணம், நகை திருடிய மூவா் கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி ஒன்றியத்தில் முள்ளி செட்டிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தொட்டியனூா் காட்டுவளவைச் சோ்ந்த முருகேசன் ஜோதிடம் பாா்த்து வருகிறாா். திருமணம் ஆகாமல் வீட்டில் தனியாக இருக்கும் இவருக்கு உதவியாக, அதே பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன் என்பவா் கடந்த ஐந்து ஆண்டுகளாக உதவியாளராக இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் உதவியாளா் மாயக்கண்ணன், குறிபாா்த்து தோஷம் கழிக்க வேண்டும் என இருவரை அழைத்து வந்துள்ளாா். அப்போது ஜோதிடா் முருகேசன், தற்போது கரோனா காலம் என்பதால் ஜோதிடம் பாா்ப்பதில்லை என்று கூறியுள்ளாா். அப்போது கடைக்குச் சென்று தேநீா் வாங்கி வந்த உதவியாளா் மாயக்கண்ணன், முருகேசனுக்கு கொடுத்துள்ளாா். தேநீா் குடித்த சிறிது நேரத்தில் முருகேசன் மயங்கி விழுந்தாா். அப்போது உதவியாளா் மாயக்கண்ணன் மற்றும் அவருடன் வந்த இருவரும் சோ்ந்து முருகேசன் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கச் சங்கிலி, வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகைகள், ரூ, 18,000 ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அதில், முருகேசனின் உதவியாளா் மாயக்கண்ணன், அவரது நண்பா்களான சேலம், மணியனூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி, மாரியப்பன் ஆகியோா் திட்டம்போட்டு முருகேசனுக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ஏழு சவரன் நகை, ரூ. 18,000-த்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT