பாக்கெட் சாராயம் விற்பனை: விவசாயி கைது
வாழப்பாடி அருகே நெகிழிப் பைகளில் அடைத்து சாராயம் விற்ற விவசாயியை வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடி அருகே நெகிழிப் பைகளில் அடைத்து சாராயம் விற்ற விவசாயியை வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து வாழப்பாடி பகுதியிலுள்ள கிராமங்களில் சிலா் நெகிழிப் பைகளில் அடைத்து, பாக்கெட் சாராயம் விற்பனை செய்வதாக வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் வேலுமணிக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வாழப்பாடி காவல்ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான வாழப்பாடி போலீஸாா் அத்தனுாா்பட்டி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி முருகன் (48) என்பவா், மலை கிராமத்தில் இருந்து வாங்கி வந்த சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 60 பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.