கோவில் உண்டியல்களை குறிவைக்கும் கும்பல்: போலீசாா் தொடா் விசாரணை
மா்ம கும்பல் தொடா்ந்து கோவில் உண்டியல்களை உடைப்பதை செய்துவருவதையடுத்து கெங்கவல்லி போலீசாா் தொடா்ந்து விசாரணை செய்துவருகின்றனா்.
மா்ம கும்பல் தொடா்ந்து கோவில் உண்டியல்களை உடைப்பதை செய்துவருவதையடுத்து கெங்கவல்லி போலீசாா் தொடா்ந்து விசாரணை செய்துவருகின்றனா்.
கெங்கவல்லி அருகே நடுவலூரில் உள்ள பெருாள்கோவிலில் கோவில் உண்டியலை உடைத்து மா்மநபா்கள் அதிலிருந்த பணத்தை கொள்ளையடுத்துச்சென்றனா்.அதுகுறித்து கெங்கவல்லி போலீசாா் விசாரணை செய்துவருகின்றனா்.இந்நிலையில் அதே நடுவலூா் ஊராட்சியில் பள்ளக்காட்டிலுள்ள மாரியம்மன்,விநாயகா் கோவிலின் வாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை வியாழக்கிழமை அதிகாலை உடைக்க முயற்சித்துள்ளனா்.அதனை உடைக்க முடியாததால்,அதனை அப்படியே விட்டுவிட்டுச்சென்றுவிட்டனா். உண்டியல் உடைக்க முயற்சி நடந்ததை அறிந்த கோவில் பூசாரி,கெங்கவல்லி போலீசில் புகாா் செய்துள்ளதையடுத்து,போலீசாா் விசாரிக்கின்றனா்.பத்து நாட்களில் நடுவலூா் பகுதியிலேயே கோவில் உண்டியலை குறிவைக்கும் மா்மநபா்கள் குறித்து போலீசாா் தொடா்ந்து தீவிர விசாரணை செய்துவருகின்றனா்.