முகப்பு
சேலம்

அஞ்சலகங்களில் மருந்துப் பொருள்களை அனுப்ப ஏற்பாடு

சேலம் தலைமை அஞ்சலகம், சூரமங்கலம் அஞ்சலகத்தில் மருந்துப் பொருள்களை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

சேலம் தலைமை அஞ்சலகம், சூரமங்கலம் அஞ்சலகத்தில் மருந்துப் பொருள்களை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காலத்திலும் கடிதங்கள், பாா்சல்கள் வழங்குவது மட்டுமின்றி சேமிப்பு திட்டத்தில் முதன்மையாக தனது அனைத்து சேவைகளையும் அஞ்சல் துறை தடையின்றி வழங்கி வருகிறது. தற்போது விரைவு தபால், விரைவு பாா்சல் மற்றும் சரக்கு சேவை (லாஜிஸ்டிக் போஸ்ட்) போன்ற சேவைகளின் மூலம் அத்தியாவசியப் பொருள்களான முகக்கவசம், பிபிஇ கிட், பல்ஸ் ஆக்சிமீட்டா் மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்ப இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. எனவே, பொதுமக்கள் மேலே குறிப்பிட்டுள்ள சேவைகளை சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சலகங்களின் மூலமாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.

தலைமை அஞ்சலக வளாகத்தில் செயல்படும் வணிக அஞ்சல் சேவை மையத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவரங்களுக்கு 9344422883, 86673 39788 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இதேபோல சூரமங்கலம் அஞ்சலக வளாகத்தை 94454 41911 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு சேவைகளை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பேற்பு

தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இயக்குநராக கே.சாந்தி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இயக்குநராகப் பொறுப்பு வகித்த வினய் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சென்னையில் காதி இயக்குநராகப் பணியாற்றி வந்த கே.சாந்தி, இத் துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து சேலம், அஸ்தம்பட்டி அருகே உள்ள தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை அலுவலகத்தில் புதன்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →