முகப்பு
சேலம்

விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் விதைப் பண்ணை அமைத்து தரமான விதைகளை வழங்குவதன் மூலம் கூடுதல் வருவாய் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் விதைப் பண்ணை அமைத்து தரமான விதைகளை வழங்குவதன் மூலம் கூடுதல் வருவாய் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிா் சாகுபடி நடைபெறுகிறது. அதற்குத் தேவையான தரமான விதைகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாகவும், தனியாா் நிறுவனங்கள் மூலமாகவும் விநியோகிக்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் மூலம் விநியோகிக்கப்படும் தரமான சான்று பெற்ற விதைகள் விவசாயிகளிடம் விதைப்பண்ணை அமைத்து கொள்முதல் செய்வதன் மூலமே விநியோகிக்கப்படுகிறது.

விதைப்பண்ணை அமைத்து தரமான விதைகளை வழங்கும் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக சான்று நிலை விதைகளுக்கு சோளம் கிலோவுக்கு ரூ. 50, ராகி ரூ. 45, தட்டைப்பயறு ரூ. 75, நிலக்கடலை ரூ. 80 வழங்கப்படுகிறது. இத்துடன் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டதின் கீழ் உற்பத்தி மானியமாக கிலோ ரூ. 25 வழங்கப்படுகிறது.

மகுடஞ்சாவடி வட்டாரத்துக்கு விதைப்பண்ணை கொள்முதல் இலக்காக நடப்பு ஆண்டு நிலக்கடலைக்கு 43 மெட்ரிக் டன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதால் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் நீா் ஆதாரமுள்ள விவசாயிகள் விவரங்களுக்கு உதவி விதை அலுவலா்கள்: செந்தில்- 9842740000, பரமசிவம்- 95445 08352 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநா் மணிமேகலா தேவி தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →