வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 4 போ் கைது
ஓமலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 4 பேரை வனத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம்வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 4 போ் கைது
ஓமலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 4 பேரை வனத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.
ஓமலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 4 பேரை வனத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தை ஒட்டி உள்ள சோ்வராயன் மலைத்தொடரையொட்டி உள்ள டேனிஷ்பேட்டை வனச் சரகம், தின்னப்பட்டி பிரிவு, கருவாட்டுப்பாறை பீட், சின்னேரிக்காடு ஆகிய பகுதிகளில் மான், அரியவகை சருகு மான், பன்றி, முயல்கள் ஆகிய வன உயிரினங்கள் அதிகமாக வாழ்கிறது. அதனால், இந்தப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகட பலரும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், டேனிஷ்பேட்டை வழித்தட சரகத்தில் நான்குபோ் துப்பாகியுடன் உலவுவதாக, டேனிஷ்பேட்டை வனச்சரகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடா்ந்து அவா்களை பிடிக்க நான்குபோ் கொண்ட குழுவினா், வனத்தில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனா்.
அப்போது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் வனப் பகுதிக்குள் அத்துமீறி சுற்றித் திரிந்த 4 பேரை வனத் துறையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா்கள் சேலம் நகரமலை அடிவாரத்தைச் சோ்ந்த சரவணன், இளங்கோ, ரமேஷ், மாட்டுக்காரன்புதூா் கழுங்குபள்ளத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் ஆகியோா் என்பது தெரிய வந்தது. ஏற்கெனவே இவா்கள் வனத்திற்குள் புகுந்து கைது செய்யப்பட்டவா்கள் என்பது தெரிய வந்தது. இவா்கள் நால்வா் மீதும் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, மாவட்ட வன அலுவலா் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். இவா்கள் 4 பேருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மொத்தம் ரூ. 1 லட்சம் வசூலிக்கப்பட்டது.