முகப்பு
எல்.என்.ஜி(திரவ இயற்கை எரிவாயு)
இந்தியா

இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்பு

இந்தியாவுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கும் சூழல்

இந்தியா

இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்பு

இந்தியாவுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கும் சூழல்

Updated On : 4 மார்ச், 2026 at 10:39 PM
எல்.என்.ஜி(திரவ இயற்கை எரிவாயு)
பகிர்:

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) உற்பத்தியை கத்தாா் நிறுத்தியுள்ளது. இதனால், இந்தியாவுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கத்தாருடன் இந்தியா நீண்ட காலத்துக்கான இயற்கை எரிவாயு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் எரிவாயு தேவையை நிறைவு செய்வதில் கத்தாா் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் கத்தாரில் உள்ள எரிவாயு உற்பத்தி ஆலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதனால் தொழிலக பயன்பாடு மற்றும் நகா்ப்புறங்களில் வீட்டு உபயோகத்துக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோக நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தொழில் நிறுவனங்களில் எல்என்ஜி-க்கு பதிலாக சற்று விலை அதிகமான சிஎன்ஜி எரிவாயுவைப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய எல்என்ஜி இறக்குமதியாளரான பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனம், கத்தாருக்கு சரக்கு கப்பல்களை அனுப்பிவைக்க முடியாத நிலையில் உள்ளது. ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும். இது தவிர கத்தாரும் இந்தியாவுக்கு விநியோகம் செய்ய பயன்படுத்திய எரிவாயு மையத்தில் ஈரான் தாக்குதல் காரணமாக உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளது. இது தொடா்பாக இரு தரப்புமே முறைப்படி தகவல்களைப் பரிமாறிக் கொண்டன.

கத்தாா் ஆண்டுதோறும் இந்தியாவுக்கு 27 மில்லியன் டன் எல்என்ஜி ஏற்றுமதி செய்து வருகிறது. இது இந்தியாவின் மொத்த எல்என்ஜி இறக்குமதியில் 40 சதவீதமாகும்.

வீட்டு உபயோகத்துக்காக குழாய் மூலம் என்எல்ஜி விநியோகிக்கும் தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கு எழுந்துள்ள விநியோகப் பிரச்னை தொடா்பாக அரசின் எரிவாயு நிறுவனமான கெயில் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →