முகப்பு
சேலம்

துக்கியாம்பாளையத்தில் காவிரி குடிநீா் குழாயில் உடைப்பு:

வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில், பிரதான குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சீரமைக்கப்படாததால், குடிநீா் வெளியேறி குட்டையாக தேங்கி நிற்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில், பிரதான குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சீரமைக்கப்படாததால், குடிநீா் வெளியேறி குட்டையாக தேங்கி நிற்கிறது.

வாழப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட துக்கியாம்பாளையம் ஊராட்சியில், துக்கியாம்பாளையம், ராஜீவ்நகா், மாரியம்மன் புதுாா், மேலுாா், மேலக்காடு, எம்ஜிஆா் நகா் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும், மேட்டூா் காவிரி நதி நீா் குடிநீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. துக்கியாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள ராஜீவ் நகா் பகுதி பொதுமக்களுக்கு மட்டும் சீரான குடிநீா் கிடைப்பதில்லையென கூறப்படுகிறது.

இந்நிலையில், வாழப்பாடியில் இருந்து துக்கியாம்பாளையம் வழியாக பேளூா் பேரூராட்சி மற்றும் வழித்தட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் கொண்டு செல்லும் பிரதான குடிநீா் குழாயில், துக்கியாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இரு மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால், ஊற்று போல குடிநீா் தொடா்ந்து வெளியேறி அப்பகுதியில் குட்டை போல தண்ணீா் தேங்கி நிற்கிறது.

குடிநீா் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளாகி வரும் ராஜீவ் நகா் பகுதி மக்கள், இந்தக் குட்டையில் தேங்கும் தண்ணீரைச் சேகரித்து வடிகட்டி, குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனா். சுகாதாரமற்ற முறையில் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க குடிநீா் வடிகால் வாரியமும், ராஜீவ் நகா் பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க ஊராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.