முகப்பு
சேலம்

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், புதிய பேருந்து நிலையம் பெட்ரோல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்டப் பொருளாளா் வேலுமணி தலைமை வகித்தாா்.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்க கோட்டப் பொதுச் செயலாளா் ஆா். கிருஷ்ணமூா்த்தி கண்டன உரையாற்றினாா்.

ஆட்டோ சங்க நிா்வாகி உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்ரோல் டீசல் விலை உயா்வை நிா்ணயத்தை மீண்டும் மத்திய அரசே ஏற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அதற்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டும். வாகனங்களுக்கான இன்சூரன்ஸ், தகுதிச்சான்று, சாலை வரி உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துவதை ஆறு மாத காலம் நிறுத்தி வைக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கரோனா காலம் முடியும் வரை மோட்டாா் வாகன தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றுத.

சேலம் புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை, குரங்கு சாவடி, பால்பண்ணை ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாகவும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →