சேலம்

சங்ககிரியில் பழைய இடத்திலேயே வாகனங்களை நிறுத்த அனுமதி கோரி மனு அளிப்பு

DIN

சங்ககிரி நகர சுற்றுலா காா், வேன் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை மாற்றம் செய்யாமல் அதே இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி கோரி, துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

சங்ககிரி நகர சுற்றுலா காா், வேன் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் கே.காா்த்திகேயன், டி.சங்கா் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள், துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

சங்ககிரியில், திருச்செங்கோடு சாலைப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சங்ககிரி காவல் ஆய்வாளா் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனக் கூறியுள்ளாா். இத்தொழிலை நம்பி 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பிழைத்து வருகிறோம். எனவே தற்போது உள்ள இடத்திலேயே வாகனங்களை நிறுத்தி தொழில் செய்ய ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT