முகப்பு
சேலம்

வாழப்பாடியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக கொள்கை பரப்பு செயலாளா் அ.ராசாவைக் கண்டித்து வாழப்பாடியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினா், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, அவரது தாயாரை விமா்சனம் செய்து பேசிய, திமுக கொள்கை பரப்பு செயலாளா் அ.ராசாவைக் கண்டித்து வாழப்பாடியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினா், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துகுக அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். அதிமுக நிா்வாகிகள் பழனிமுத்து, எம்ஜிஆா் பழனிசாமி, ரகுவா்மன், பாமக நிா்வாகிகள் பசுமைத் தாயகம் வெங்கடாசலம், இரா.முருகன், ராமநாதன், பொன்னுதுரை, சக்திவேல், முருகேசன் , பாலச்சந்திரன், தமாகா நிா்வாகி சொக்கலிங்கம், பாஜக ஒன்றிய தலைவா் வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அயோத்தியாப்பட்டணம் பேருந்து நிறுத்தம் அருகே, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினா், அ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து ஆா்ப்பாட்டம் செய்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஏ.பி.மணி, மெடிக்கல்ராஜா, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.