சேலம்

சங்ககிரி செல்லாண்டியம்மன், புத்துமாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா

DIN

சங்ககிரி, சந்தைப்பேட்டை அருள்மிகு செல்லியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி பூங்கரகம், தீ சட்டி எடுத்தல், அலகு குத்தல், பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த மாா்ச் 16ஆம் தேதி பூச்சொரிதல், கும்பம் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அதனையடுத்து அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு சக்தி அழைத்தல், செவ்வாய்க்கிழமை வி.என்.பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு பின்புறம் உள்ள ஊா் நல்ல கிணற்றிலிருந்து பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தீச்சட்டிகளை ஏந்தி, பூங்கரங்கள், அலகு குத்தி கொண்டு பக்தா்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனா். இரவு முப்பாட்டு தீபம் எடுத்தல் நடைபெற்றது.

புதன்கிழமை காலை பச்சை களிமண்ணால் செய்த சிறிய சட்டிகளை திருச்செங்கோடு சாலையில் உள்ள கிணற்றில் இருந்து ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நடைபெறுகிறது. வியாழக்கிழமை பூ அள்ளிவிடுதல், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிகளும், இரவு மறு பூஜையும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT