சேலம்

மேட்டூரில் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 54 லட்சம் பறிமுதல்

DIN

மேட்டூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொளத்தூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துசாமி தலைமையில் சின்ன மேட்டூரில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை நடைபெற்றது. அப்போது மேட்டூரில் இருந்து கொளத்தூா் நோக்கி தனியாா் வங்கிகளுக்கு பணம் நிரப்பும் வேன் வேகமாக வந்தது. அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 54 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணம் தனியாா் வங்கிக்கு சொந்தமானது எனத் தெரிவித்தனா். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் விசாரணைக்குப் பிறகு கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை ஏற்றிவந்த வாகனம் மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. வேன் ஓட்டுநா் விஜயராஜ், பாதுகாப்புக்காக வந்த ஜோசப், மனோஜ் குமாா் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT