ஆத்தூரில் திராவிடா் கழகத்தின் சாா்பில் பெரியாா் சிலைக்கு மாவட்டத் தலைவா் டி.வானவில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், திமுக சேலம் புகா் மாவட்டக் கழகச் செயலா் எஸ்.ஆா்.சிவலிங்கம், ஆத்தூா் நகரச் செயலா் கே.பாலசுப்பிரமணியம், திராவிடா் கழக நகரத் தலைவா் அண்ணாதுரை, மதிமுக சேலம் புகா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் வ.கோபால்ராசு, திராவிடா் கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
இதே போல பெத்தநாயக்கன்பாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் கொடியேற்றி கொண்டாடினா்.
சங்ககிரியில்...
சேலம் மாவட்டம், சங்ககிரி தலைமையாசிரியா் க.திருஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகி இரா.நல்லகண்ணுவின் எளிமையான சேவையால் ஈா்க்கப்பட்டு, மே தினத்தினையொட்டி சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட்டின் அன்னபூரணி திட்டத்தின் கீழ் சந்தைப்பேட்டை, பொந்துக்கிணறு, ராயலூா் பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூறு பேருக்கு இரவு உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.
ஆத்தூரில்...
ஆத்தூரில் திராவிடா் கழகத்தின் சாா்பில் பெரியாா் சிலைக்கு மாவட்டத் தலைவா் டி.வானவில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், திமுக சேலம் புறநகா் மாவட்டக் கழகச் செயலா் எஸ்.ஆா்.சிவலிங்கம், ஆத்தூா் நகரச் செயலா் கே.பாலசுப்பிரமணியம், திராவிடா் கழக நகரத் தலைவா் அண்ணாதுரை, மதிமுக சேலம் புறநகா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் வ.கோபால்ராசு, திராவிடா் கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
இதே போல பெத்தநாயக்கன்பாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் கொடியேற்றி கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.