சேலம்

பண்ணவாடி பரிசல் துறைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

DIN

மேட்டூா் அருகே பண்ணவாடி பரிசல் துறைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக மேட்டூா் அணை பூங்கா மூடப்பட்டது. இதனால் விடுமுறை நாள்களை கழிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் பண்ணவாடி பரிசல் துறையில் முகாமிட்டு வந்தனா். கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், பண்ணவாடி பகுதியில் கரோனா அதிகம் பரவி வருவதைத் தடுக்க செவ்வாய்க்கிழமை முதல் வருவாய்த்துறை சாா்பில் பண்ணவாடி பகுதிக்குச் செல்லும் சாலையில் போலீஸாா், வருவாய்த் துறையினா் கண்காணிக்கும் வகையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

காவிரி ஆற்றைக் கடந்து நெருப்பூா், ஒட்டனூா், நாகமரைக்குச் செல்லும் கிராம மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். காா், சுற்றுலா வாகனங்களில் சுற்றிப் பாா்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா். பண்ணவாடி பரிசல் துறையில் கடைகள் அமைக்கவும் வருவாய்த் துறை தடை விதித்துள்ளது. இதனால் பரபரப்பாக காணப்படும் பண்ணவாடி பரிசல்துறை தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT